Available Here: Goat Diet Advice

ஆடுகளுக்கு என்ன தீவனம் கொடுக்கலாம்/Goat feed management

Dislike 0 Published on 29 Jan 2020

ஆடுகளுக்கேற்ற தீவனங்கள்

அகத்தி, சூபாபுல், கிளைரிசிடியா, கொடுக்காபுளி, அச்சா, முருங்கை, கல்யாண முருங்கை, வாகை, வேம்பு, வேள்வேல், உதியன், கருவேலம், குடைவேல், ஆல், அத்தி, பலா, இலந்தை, நாவல் போன்றவை. ஒரு வெள்ளாட்டிற்கு தினமும் 5 முதல் 6 கிலோ வரை பசுந்தீவனம் தேவைப்படும். புல் வகை தீவனம் 3 முதல் 3.5 கிலோ வரையும், பயறுவகை தீவனம் 2 கிலோவும், மரத்தழைகள் 1.5 கிலோவும் கொடுக்கலாம்.

தாது உப்புக்கட்டி

மேய்ச்சலில் வளரும் ஆடுகளுக்கு அனைத்துவிதமான ஊட்டச்சத்துக்களும் கிடைக்காது. குறிப்பாக சுண்ணாம்பு சத்து, இரும்பு சத்து குறைபாடு ஏற்பட்டால் சினை பிடிப்பது காலதாமதமாகும். இதனை தவிர்க்க தாது உப்புக்கட்டியை கொடுப்பது அவசியம். தாது உப்புக்கட்டியில் முக்கிய தாது உப்புகளான கால்சியம், பாஸ்பரஸ், சோடியம் குளோரைடு, பொட்டாசியம், கந்தகம், மக்னீசியம் மற்றும் நுண்ணூட்டச் சத்துகளான இரும்பு, துத்தநாகம், தாமிரம் மற்றும் மாங்கனீசு போன்றவையும் உள்ளடங்கி இருக்கின்றன. இந்த தாது உப்பு கட்டியை ஆட்டுக்கொட்டகையில் கட்டி தொங்க விட்டு வளரும் ஆடுகள், சினை மற்றும் குட்டி ஈன்ற ஆடுகளுக்கு கொடுக்கலாம். வெள்ளாடுகளுக்கு அயோடின் சத்து கலந்த சமையல் உப்பு மிகவும் அவசியம். இது தாது உப்பு கட்டியில் கலந்திருப்பதால் அதனை வழங்கவேண்டும்.

அடர் தீவனம்

ஆடுகளின் உடல் எடைக்கேற்ப அடர் தீவனம் அளிக்க வேண்டும். அதாவது உடல் எடையில் 1 முதல் 1.5 சதவீதம் அடர் தீவனம் கொடுக்க வேண்டும். 3 முதல் 6 மாதம் ஆன குட்டிகளுக்கு தினமும் 150 கிராம் தீவனம் கொடுக்கலாம். கடலைப்பொட்டு, உளுந்து தோல், பருத்தி விதைத்தோல், சோயா மொச்சைதோல், மரவள்ளி கிழங்கு மாவு, புளியங்கொட்டை மாவு, வேப்பம்புண்ணாக்கு, கருவேலம் மற்றும் சீமைக் கருவேல மர நெற்றுக்கள் போன்றவைகளை பயன்படுத்தி அடர் தீவனம் தயாரிக்கலாம். அதன் மூலம் தீவன செலவை குறைக்கலாம்.

முழுத் தீவனம்

முழுத் தீவன தயாரிப்பில் 30 சதவீதம் சோளத்தட்டை, 20 சத வீதம் உலர்ந்த சூபாபுல் இலை, 17 சதவீதம் தவிடு, 30 சதவீதம் சீமை கருவேலம் அல்லது கருவேல மரக்காய் அல்லது நெற்றுகள், 2 சதவீதம் தாது உப்பு கலவை, 1 சதவீதம் உப்பு ஆகியவை இடம் பெற்றிருக்க வேண்டும்.

channel contact :8807671279